News March 19, 2025
தேனி : திருமணத்தடை நீங்க வேண்டுமா?

தேனி நகர் பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள மூலவர் மீனாட்சி அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இங்கு நடைபெறும் நித்ய பூஜையில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
Similar News
News March 20, 2025
தேனி : இந்த கோவிலுக்கு இவ்வளவு சக்தியா?

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ளது வழிவிடும் முருகன் கோவில். இங்கு மூலவராக உள்ள முருக பெருமானுக்கு தினசரி பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளா ஏலத்தோட்ட வேலைக்கு செல்லும் வேலையாட்கள் இந்த கோவிலில் தினசரி வழிபாடு நடத்திச் செல்கின்றனர். நெடுந்தூர பயணத் திட்டம் நிறைவேறாமல் இருந்தால் இங்கு வழிபட்டுச் சென்றால் பயணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
News March 20, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் (மார்ச் 20) நீர்மட்டம்: வைகை அணை: 59.32 (71) அடி, வரத்து: 150 க.அடி, திறப்பு: 722 க.அடி, பெரியாறு அணை: 113.40 (142) அடி, வரத்து: 221 க.அடி, திறப்பு: 311 க.அடி, மஞ்சளார் அணை: 31 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 69.37 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 33.50 (52.55) அடி, வரத்து: 5 க.அடி, திறப்பு: இல்லை.
News March 20, 2025
காசிக்கு நிகரான தேனியின் பெரிய கோவில்

தேனி மாவட்டதிலேயே பரப்பளவில் பெரியதாக பெரியகுளம் பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது.ராஜேந்திர சோழன் கட்டிய இந்த கோவிலில் மூலவராக சிவன் இருந்தாலும் முருகன் தான் பிரசித்தி பெற்றவர்.இங்குள்ள வராக நதியில் நீராடி முருகனை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.காசியை போன்று நதியின் இருபுறமும் நேரெதிரே ஆண் பெண் மருத மரங்கள் அமைந்துள்ளது சிறப்பு .