News March 20, 2025
தேனி : இந்த கோவிலுக்கு இவ்வளவு சக்தியா?

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ளது வழிவிடும் முருகன் கோவில். இங்கு மூலவராக உள்ள முருக பெருமானுக்கு தினசரி பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளா ஏலத்தோட்ட வேலைக்கு செல்லும் வேலையாட்கள் இந்த கோவிலில் தினசரி வழிபாடு நடத்திச் செல்கின்றனர். நெடுந்தூர பயணத் திட்டம் நிறைவேறாமல் இருந்தால் இங்கு வழிபட்டுச் சென்றால் பயணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
Similar News
News March 30, 2025
தேனியில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவை, தென்காசி, தேனி உட்பட 5 மாவட்டங்களில் ஏப்ரல் 2 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், ஏப்ரல் 3 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News March 30, 2025
தேனியில் இலவச கருத்தரித்தல் ஆலோசனை முகாம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேனி- பெரியகுளம் செல்லும் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுதா கருத்தரித்தல் மையத்தில் 31.03.2025 அன்று இலவச குழந்தையின்மைக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 7670076006 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.
News March 30, 2025
மருத்துவ விழிப்புணர்வு முகாம்-கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் புற்றுநோய்,பக்கவாதநோய்,தொழுநோய்,காசநோய்,கண்பார்வை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு பெரியகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அடுத்த மாதம் ஏப்.9 மற்றும் 16ந் தேதிகளில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சீத்சிங் தெரிவித்தார்.