News March 6, 2025
தேசிய அளவில் குமரி மாணவிகள் சாதனை!

கன்னியாகுமரி மாவட்டம், கோவளம் பகுதியை சேர்ந்த மாணவிகள் ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் குழு படகு ஓட்டுதல் போட்டியில்(Asmita rowing league) வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர். அவர்களை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அந்த ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News March 6, 2025
குமரி நீலகண்ட சாமி கோவில் தலபுராணம்

பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவில் 12 சிவாலயங்களில் 7வது சிவாலயம் ஆகும். வேணாட்டரசர்கள் இங்கே இருந்த போது, தறி கேட்டு ஓடிய குதிரை ஒன்று கோவில் இருக்கும் இடத்திற்கு வந்து அடைப்பட்டு நின்றதாம். அரசன் குதிரை நின்ற இடத்தில் சுயம்புவான லிங்கத்தை கண்டு, அங்கு கோவில் கட்டியதாக தலபுராணம் கூறுகிறது. ஆனந்தவல்லி அம்மனுக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது. 2 கொடி மரங்கள் இந்த கோவிலில் உள்ளன.
News March 6, 2025
விவேகானந்தர் பாறைக்கு செல்ல 3 புதிய படகுகள் -அமைச்சர்

குமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகிறார்கள். தற்போது அங்கு 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட மூன்று புதிய படகுகள் வாங்கப்பட இருப்பதாக தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு சென்னையில் நேற்று சென்னையில் தெரிவித்தார்.
News March 6, 2025
குமரி மாவட்டத்தில் 3 பேருந்துகளுக்கு ஒரே எண்

குமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் 3 பேருந்துகளுக்கு ஒரே எண் வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் மூன்று பேருந்துகளின் படங்களுடன் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பழைய பேருந்துகள் மாற்றிவிட்டு புதிய பேருந்துகளுக்கு பழைய பேருந்துகளின் எண்கள் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. *இது குறித்த உங்கள் கருத்தை ஜாலியா கமெண்ட்ல சொல்லுங்க*