News January 22, 2025

தென்காசியில் 24ஆம் தேதி சலூன் கடைகள் முழு அடைப்பு போராட்டம்

image

தென்காசி மாவட்ட முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்க தலைவர் ரவி, செயலாளர் பண்டாரசிவன்,பொருளாளர் முருகன் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சென்னையில் வரும் 24ஆம் தேதி முடிதிருத்தம் தொழிலாளர் நல சங்கம் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் மூடி அடைப்பு செய்து போராட்டம் நடப்பதாக தெரிவித்தனர்.

Similar News

News August 11, 2025

தென்காசியில் நாளை மின்தடை

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள மங்கம்மாள் சாலை துணைமின் நிலையத்தில் நாளை (12.8.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன்நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News August 11, 2025

போதைப் பொருளுக்கு நாளை எதிரான விழிப்புணர்வு

image

தென்காசி, புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இ.சி.ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி கூட்டரங்கில் நாளை காலை தமிழ்நாடு துணை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

News August 10, 2025

தென்காசி: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

image

தென்காசி மக்களே!
1. இங்கு <>க்ளிக்<<>> செய்து ரேஷன் கார்டு படிவத்தை DOWNLOAD பண்ணுங்க.
2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
5. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில…
ரேஷன் கார்டு பெயர் நீக்கம், சேர்த்தல் தொடர்ச்சி வேணுமா COMMENT.. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!