News April 15, 2025
தென்காசி: வேலைதேடும் இளைஞரா நீங்கள் ?

தென்காசி மாவட்டத்தில் அரசு சார்பில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 17.04.2025 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் <
Similar News
News April 18, 2025
தென்காசி : கடவுளின் தலைவலியை போக்கும் தைலம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலநாதர் கோயில் சைவ சமய பெரியோர், நாயன்மார்களால் பாடல் பெற்ற பழமை வாய்ந்த கோயில் ஆகும். இக்கோயிலில் மூலவர் குற்றாலநாத சுவாமிக்கு ஏற்படும் தலைபாரத்தை நீக்க ஒவ்வொரு ஆண்டும் 48 மூலிகைகளால் தயாரிக்கப்படும் சந்தனாதி தைலம் காய்ச்சப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தைலம் விற்பனை செய்யப்படுவதால் ஏராளமான மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
News April 18, 2025
தென்காசி மாவட்ட பிரதான அணைகளின் நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்டம் மேக்கரையில் 132 அடி முழு கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 32.50அடி ,72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணை நீர்மட்டம் 25 . 92 அடி ,36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் 24 அடி , 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 54 அடி .85 முழு கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 52 அடி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
News April 18, 2025
ஆலங்குளத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை, அறிவியல் கல்லூரியில் கோடை கால விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாம், விளையாட்டு போட்டிகள் ஏப்.21 முதல் மே 5 வரை நடைபெறவுள்ளது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு கபடி, கைப்பந்து, கிரிக்கெட் இலவசமாக பயிற்சியளிக்கப்படவுள்ளது. 63691107840, 9585713337, 9486511103 என்ற எண்ணில் முன்பதிவு செய்திடும் படி கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.