News April 18, 2025

தென்காசி மாவட்ட பிரதான அணைகளின் நீர்மட்ட நிலவரம்

image

தென்காசி மாவட்டம் மேக்கரையில் 132 அடி முழு கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 32.50அடி ,72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணை நீர்மட்டம் 25 . 92 அடி ,36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் 24 அடி , 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 54 அடி .85 முழு கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 52 அடி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

Similar News

News April 30, 2025

தென்காசியில் ஓசியில் சிகரெட் கேட்டு அடித்துக் கொலை

image

தென்காசி மாவட்டம் அடைச்சாணியைச் சேர்ந்த மாரிமுத்து (30), துப்பாக்குடி டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது வேல்முருகன், பட்டுசாமி, ராஜபாண்டி ஆகிய 3 பேர் அவரிடம் சிகரெட் கேட்டு தகராறு செய்தனர். தகராறு கைகலப்பாக மாறியதில், மூவரும் மதுபாட்டிலால் மாரிமுத்துவைத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். காயமடைந்த பட்டுசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 29, 2025

தென்காசியில் குடைவரை கோவிலா.? எங்கு தெரியுமா?

image

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள திருமலாபுரத்தில் மலையை குடைந்து பசுபதிசுவரர் குடைவரை கோவில் உள்ளது .இந்த கோவில் 1200 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது.இந்த கோவிலில் லிங்க வடிவத்தில் சிவன் காட்சியளிக்கிறார்.பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது .இந்த கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 29, 2025

நான்கு சக்கர வாகன வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நான்கு சக்கர வாகன வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நலச் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் போக்குவரத்து துறையில் புதிய சட்டத்தின்படி, ஆர்சி புத்தகத்தை தபாலில் வழங்குவதை ரத்து செய்து பழைய சட்டத்தின்படி, ஆர்சி புத்தகத்தை நேரில் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!