News April 3, 2025

தென்காசி: கேரளா அரசு பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது

image

தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை கேரள மாநிலம்  திருவனந்தபுரத்திற்கு கேரளா மாநில அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது இந்த பேருந்து புளியரை அருகே உள்ள ஆரியங்காவில் அமைந்துள்ள மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் நிறுத்தி சோதனை செய்த பொழுது பேருந்தில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு, அதனை கொண்டு சென்ற அஞ்சல் பகுதியைச் சேர்ந்த சஜு என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 17, 2025

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை அனுப்ப மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது புகார்களை மாநில ஆணையர், எண்.05, காமராஜர் சாலை, லேடி வெலிங்கடன் மகளிர் கல்லூரி வளாகம், சென்னை-600005 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது tnscpwdcircuitcourt@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ (30.04.2025) ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9499933236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

தென்காசியில் கோடைகால பயிற்சி முகாம் 

image

தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 21 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04633-212580 / 86100 37399 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

புளியங்குடி அருகே யோகா மாஸ்டர் மர்ம சாவு

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி செல்லும் சாலையில் உள்ள இருமன்குளத்தை சேர்ந்தவர் மருதையா என்ற யோகா மருதையா (50). யோகா மாஸ்டரான இவர் நேற்றிரவு புதிய வீடு கட்டும் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .

error: Content is protected !!