News April 2, 2025

தூத்துக்குடியில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

image

தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 தொழில்நுட்ப உதவியளர்(Field Technician) காலிப்பணியிடம் உள்ளது. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 29 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து ஏப்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News April 3, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News April 3, 2025

தூத்துக்குடியில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும்(ஏப்.3,4) தூத்துக்குடியில் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 3, 2025

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!