News March 31, 2025

தூத்துக்குடி : விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு 

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் அடுக்கு திட்டத்தின்கீழ் விவசாயிகளின் நிலஉடைமை விவரங்கள் கிராமங்கள் தோறும் கட்டணமின்றி வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் எண் ,ஆதார் எண்ணுடன்  இணைக்கப்பட்ட கைபேசி, பட்டா நகளுடன் அணைத்து பொதுசேவை மையத்தில் ஏப்ரல் 15ம் தேதிக்குள்  பதிவு செய்யவேண்டுமென வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Similar News

News April 4, 2025

செண்பகவல்லியம்மன் கோவில் நாளை கொடியேற்றம்

image

கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நாளை (ஏப்.5) காலை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடைபெறுகிறது. அதன் பின் 7 மணியிலிருந்து 8 மணிக்குள் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 4, 2025

தூத்துக்குடியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்.4) தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 4, 2025

சமையல் எரிவாயு குறைதீர்ப்பு கூட்டம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதம் ஒன்பதாம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!