News April 5, 2025
தூத்துக்குடி : போக்சோ வாலிபருக்கு ஐந்து ஆண்டு சிறை

ஆழ்வார் திருநகரி அருகே உள்ள செம்பூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (22). இவர் 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவர் மீது தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் ஆழ்வார் திருநகரி போலீசார் போக்சோ வழக்கு தொடர்ந்ததனர். இதில் இவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News April 6, 2025
மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய சிபிஎம் கட்சியினர்

தூத்துக்குடி மேல அலங்காரத்தை சேர்ந்த வின்சென்ட் 1999 தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு இறந்தார். இது சம்பந்தமாக நடைபெற்று வந்த வழக்கில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று 9 காவல்துறையினருக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதனையடுத்து நேற்று உயிரிழந்த வின்சென்ட் இல்லத்திற்கு சென்ற பொதுமக்கள் சிபிஎம் கட்சியினர் அவரது படத்திற்கு மாலை அணிவித்தனர்.
News April 6, 2025
தூத்துக்குடியில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவு மற்றும் பொறியாளர் தொழில்நுட்ப ஆதரவு பிரிவில் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 18 முதல் 25 வயதிற்குட்பட்ட இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மாதம் ஊதியமாக ரூ.15000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
News April 6, 2025
தூத்துக்குடி சிறுவன் கொலையில் இரட்டை ஆயுள்

எட்டையபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2019 -ம் ஆண்டில் 6 வயது சிறுவனை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்த அருண்ராஜ் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றவாளிக்கு 2 ஆயுள் தண்டனைகள் மற்றும் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.30,000 அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் நேற்று தீர்ப்பளித்துள்ளார்.