News March 3, 2025

தூத்துக்குடி: பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் மரணம்

image

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை வேலாயுதபுரத்தைச் சேர்ந்த பல்க் உரிமையாளர், தொழிலதிபர் மற்றும் பாஜகவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் P. போஸ் (02.03.2025) நேற்று இயற்கை எய்தினார். பாஜக சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவர் என கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Similar News

News March 4, 2025

தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்றைய (4) நிகழ்ச்சிகள்

image

தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று (4) காலை 10 மணிக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொடுக்காம் பாறை, கிழவிப்பட்டி ஆகிய பகுதிகளில் கட்டப்படவுள்ள சமுதாய நலக் கூடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 11 மணிக்கு கீழ பாண்டவர் மங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அதன்பின் நாலாட்டின் புதூரில் புதிய நியாயவிலைக் கடை கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2025

தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து பணிகள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர் மற்றும் மணியாச்சி ஆகிய பகுதிகளில் இன்று 03.03.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரத்திற்கு 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News March 3, 2025

தூத்துக்குடி துறைமுகத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசிகள்

image

ஆப்பிரிக்கா தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசிகள் ஆப்பிரிக்கா தென் அமெரிக்காவிற்கு செல்வோர்கள் அங்கிருந்து வருபவர்களுக்கு வழங்கப்படுகிறது. ரூபாய் 300 கட்டணமாக செலுத்தி துறைமுக சுகாதார அதிகாரிகளிடம் இதனை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!