News March 26, 2025
தூத்துக்குடி: இன்று முதல் வெப்பம் அதிகரிக்கும்

இன்று(மார்ச் 26) முதல் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். அடுத்த 1 வாரத்திற்கு வெப்பநிலை அதிகரித்தே காணப்படும். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வரும் நாட்களில் 100°F-க்கு மேல் வெப்பநிலை பதிவாகும். இந்த நிலை மார்ச் 31 ஆம் தேதி வரை நீடிக்கும். ஏப்.1 முதல் வெப்பநிலை படிப்படியாக குறையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
Similar News
News April 12, 2025
தூத்துக்குடி மாவட்ட ரோந்து போலீஸ் எண்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (ஏப்.11) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 11, 2025
திருச்செந்தூர் மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் குழந்தை இறந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று அமைச்சர் ம.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.
News April 11, 2025
BREAKING அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு கனிமொழி

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக முதல்வரின் தங்கையுமான கனிமொழி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை சிறிது நேரத்திற்கு முன்பு பதிவிட்டுள்ளார். அதில் “அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என பதிவிட்டுள்ளார். இப்பதிவு பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.