News April 1, 2024

தூத்துக்குடி அருகே விபத்து: ஒருவர் பலி

image

குலசேகரப்பட்டினத்தை சேர்ந்தவர் மாதேஷ் .நேற்று இவர் தனது நண்பர் விஜய்யுடன் இருசக்கர வாகனத்தில் பரமன்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் ஓரத்தில் இருந்த அறிவிப்பு பலகையின் மீது பைக் மோதியதில் மாதேஷ் சம்பவ இடத்திலே பலியானார். விஜய் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 14, 2025

அம்பேத்கர் பிறந்தநாள் – தூத்துக்குடி எம்பி சூளுரை

image

தூத்துக்குடி எம்.பி கனிமொழி இன்று (ஏப்.14) முகநூல் பக்கத்தில்; ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை கீற்றாக, ஜனநாயக உரிமைக்காக ஓங்கி ஒலித்த குரலாக, சாதி மத ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக என்றென்றும் சுடர்விட்டு ஒளிரும் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று. அவர் உயர்த்தி பிடித்த அடிப்படை கட்டுமானங்களை அழிக்கத் துடிக்கும் பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்.

News April 14, 2025

தூத்துக்குடிக்கு எஸ்ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்

image

தூத்துக்குடியை சேர்ந்த வாலிபரை தென்பாகம் எஸ்ஐ முத்தமிழ் அரசன்  தாக்கியதாகவும், அதனால் வாலிபருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது .இதைத் தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசனை மீண்டும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.

News April 14, 2025

முதல்வர் படைப்பகம் இடம் தேர்வு

image

தமிழகத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வசதியாக முதல்வர் படைப்பகம் 30 இடங்களில் அமைக்க நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முதல்வர் படைப்பகம் அமைக்கும் இடத்திற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் இன்று மாநகராட்சி மேயர் ஜெகன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் ஈடுபட்டனர்.

error: Content is protected !!