News March 25, 2025
துறைமுகத்தில் இன்டர்ன்ஷிப் மாணவிக்கு பாலியல் தொல்லை

சென்னை துறைமுகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் 30 நாட்கள் இன்டர்ன்ஷிப் சென்றுள்ளார். அங்கு துறைமுக போக்குவரத்து உதவி கண்காணிப்பாளர் சத்ய சீனிவாசன் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவியின் புகாரின் பேரில், சத்ய சீனிவாசன் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண் வன்கொடுமை சட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 26, 2025
சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. இதனால் மார்ச்.29 அன்று காலை 10 மணி முதல் மார்ச்.30 அன்று காலை 10 மணி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News March 26, 2025
சென்ட்ரல் ஆவடி நள்ளிரவு மின்சார ரயில் ரத்து

பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை சென்ட்ரல் ஆவடி இடையே நள்ளிரவு இயங்கும் புறநகர் மின்சார ரயில் மார்ச் 26,27,28 தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. ஆவடி ரயில் பணிமனையில் மார்ச் 26,27,28 தேதிகளில் நள்ளிரவு 12:30 மணி முதல் 3:30 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் அந்நாளில் சென்ட்ரலில் இருந்து 12:15க்கு ஆவடி செல்லும் புறநகர் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
News March 26, 2025
இந்திய ரயில்வே வேலை: சூப்பர் சம்பளம்

இந்தியன் ரயில்வேயில் ALP எனப்படும் உதவி லோகோ பைலட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 9,900 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இந்த <