News March 20, 2025
துணை மின் நிலையங்கள் அமைத்து வருகிறோம்: அமைச்சர்

“திருவள்ளூர் மாவட்டத்தில் 31 துணை மின் நிலையங்கள் அமைக்க இந்த ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மின் தேவையை ஈடுசெய்ய, ஆய்வு செய்து தேவையான இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைத்து வருகிறோம்” என கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் கேள்விக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.
Similar News
News March 21, 2025
பாஜக பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து காவல் நிலையம் முற்றுகை

பாஜகவை சேர்ந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவ கோகுல கிருஷ்ணனை நேற்று அடையாளம் தெரியாத ஐந்து பேர் சேர்ந்த கும்பல் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பாஜக வை சேர்ந்த பலர் மீஞ்சூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
News March 21, 2025
குழந்தை பாக்கியம் அருளும் அங்காள பரமேசுவரியம்மன்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர் அங்காள பரமேசுவரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவிலாகும். குழந்தை பாக்கியம் வேண்டி இக்கோவிலில் வந்த வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதை பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் பலர் அங்காள பரமேசுவரியம்மனை வழிபடுவர். ஷேர் பண்ணுங்க
News March 21, 2025
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் 41973 விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இவர்களில் 16250 பேர் மட்டுமே தனித்துவ அடையாள அட்டை பெற்றுள்ளனர். மீதமுள்ள 25,723 விவசாயிகள் மார்ச் 31க்குள் தனித்துவ அடையாள அட்டை பெற்றால் மட்டுமே ஏப்ரல் மாதம் கவுரவ உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.