News March 27, 2025

துணிச்சலாக பணியாற்றிய காவலருக்கு பாராட்டு 

image

வேட்டவலம் அடுத்த ஆவூரில் நேற்று நள்ளிரவு அடகுகடையில் கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்ற போது போலீசார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் அவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டும் திருட்டை தடுத்து நிறுத்தினார். இந்நிலையில், சிறப்பாக பணியாற்றிய அவருக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார். நாமும் இவரை பாராட்டுவோமே. ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 13, 2025

65 வயதில் மறுமணம்; சித்த மருத்துவரை ஏமாற்றிய பெண்

image

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன்(65). சித்த மருத்துவரான இவரை, திருமணம் செய்துகொள்வதாகச் கூறி, நகைகள் வாங்கி ஏமாற்றிய வழக்கில் 57 வயதான கீதா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் இதே மாதிரியான மோசடிகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் நகைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து, கீதாவை சிறையில் அடைத்தனர்.

News April 13, 2025

ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

காவல்: திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News April 13, 2025

திருவண்ணாமலை இன்றைய வெயில் நிலவரம்

image

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி செல்சியஸ் ஆகவும், 102.2 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் வெயில் பதிவாகியுள்ளது. எனவே, நண்பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!