News November 15, 2024
தீர்த்தமலை அடிவார சாலையை சீரமைக்க கோரிக்கை
அரூர் அருகே உள்ள தீர்த்தமலையில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது. அவ்வாறு வரும் பக்தர்கள் பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறிது தூரம் நடந்து சென்றுதான் மலை ஏற துவங்குகின்றனர். பஸ் நிறுத்தம் முதல் மலை அடிவாரம் வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.எனவே தீர்த்தமலை அடிவார சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 19, 2024
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12,836 பேர் விண்ணப்பம்
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு முகாமில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 907 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற முகாமில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், பெயர் நீக்கம் மற்றும் திருத்தம், முகவரி மாற்றம் என முகாமில் இதுவரை 12,836 பேர் விண்ணப்பித்துள்ளதாக என அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
News November 19, 2024
தர்மபுரி மாவட்டத்தில் 336 போக்சோ வழக்குகள் பதிவு
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 2023 முதல் டிசம்பர் 2023 வரை பாலியல் வன்கொடுமை, வளரிளம் பருவ கர்ப்பம், குழந்தை திருமணம் ஆகிய நிகழ்வுகளை ஏற்படுத்தியவர்கள் மீது 165 போக்சோ வழக்குகளும், ஜனவரி 2024 முதல் அக்டோபர் 2024 வரை பாலியல் வன்கொடுமை, வளரிளம் பருவ கர்பபம் ஆகிய நிகழ்வுகளை ஏற்படுத்தியவர்கள் மீது 171 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளதாக கலெக்டர் சாந்தி அறிக்கையில் நேற்று தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
தருமபுரி மருத்துவமனைக்கு ஆட்சியர் உத்தரவு
தருமபுரி மாவட்டத்தில் மகப்பேறு மரணம் நிகழ்ந்த மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதன் பிறகு அம்மருத்துவமனையின் தரம் Level3-ல் இருந்து Level2ஆக தரயிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் அம் மருத்துவமனையில் (Complicated High Risk) தாய்மார்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கக்கூடாது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவின்பேரில் நேற்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.