News April 6, 2025

தீரா நோய் தீர்க்கும் புன்னைநல்லூர் மாரியம்மன்

image

தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர் 8 திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வமாக உருவாக்கினார். அதில் ஒருவர் தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன். இங்குள்ள அம்மன் புற்று மண்ணால் ஆனது. ஆகவே இந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்வதில்லை, அதுவே இக்கோயிலின் சிறப்பாகும். அதற்குமாறாக 5 ஆண்டுக்கு ஒருமுறை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். இங்கு வழிபட்டால் அம்மை நோய் மற்றும் தீரா நோயும் தீரும் எனக்கூறப்படுகிறது.

Similar News

News April 23, 2025

தஞ்சாவூர்: ரூ.35,000 சம்பளத்தில் வேலை. இதை செய்தால் போதும்..

image

தேசியத் தலைநகர் பிராந்தியப் போக்குவரத்துக் கழகத்தில் (NCRTC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 9 பதவிகளின் கீழ் 72 காலிப்பணிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிப்ளமோ, ஐடிஐ & பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.18,250 முதல் 75,850 வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஏப்.24-க்குள் (நாளை) https://ncrtc.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE செய்யவும்!

News April 23, 2025

தஞ்சாவூர் வழியாக திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

image

தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக திருச்சி – தாம்பரம் இடையே (ஏப்ரல்.29) ஆம் தேதி முதல் ஜன சதாப்தி சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகம் நெரிசலைத் தவிர்க்க திருச்சி -தாம்பரம் இடையே ஜன சதாப்தி சிறப்பு விரைவு ரயில் (ஏப்.29) முதல் (ஜூன்.29)வரை வாரந்தோறும் செவ்வாய், புதன் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.

News April 23, 2025

தஞ்சாவூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சையில் செயல்பட்டு வரும் பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசு பள்ளியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கல்வி சேர்க்கை நடைபெறுகிறது. 1ஆம் முதல் 11ஆம் வகுப்பு வரை நடைபெறும் இந்த சேர்க்கை முகாமில் தஞ்சை மாவட்டம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள பார்வைத்திறன் குறைவுடைய மாணவர்கள் சேர்ந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!