News October 28, 2024
தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை – காவல்துறை அறிவுரை
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று(அக்.28) வெளியிட்ட தீபாவளி திருநாள் முன்னெச்சரிக்கை அறிவுரைகள்; அதிக ஒலி எழுப்பும் மற்றும் ஆபத்தான பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்கவும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் கண்காணிக்க வேண்டும். மின் வயர் இல்லாத திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பயன்படுத்திய பட்டாசுகளை குப்பை தொட்டியில் போட்டு அப்புறப்படுத்தவும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Similar News
News November 20, 2024
நெல்லை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 100 சென்டிமீட்டர் மழை
நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் இன்று(நவ.20) காலை வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் நாலு முக்கு பகுதியில் 166 மி.மீ., ஊத்து பகுதியில் 154 மி.மீ., காக்காச்சியில் 136 மி.மீ. என கடந்த 24 மணி நேரத்தில் இன்று காலை 10 மணி வரை நிலவரப்படி 100 செ.மீ. மழை பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 20, 2024
வெள்ள தடுப்பு அறிவுரை வழங்கிய மாவட்ட நிர்வாகம்
நெல்லை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மக்கள் மழை நேரங்களில் டார்ச் லைட், வானொலி பெட்டி போன்றவை தயாராக வைத்திருக்க வேண்டும். குடை மற்றும் மூங்கில் கம்பு ஒன்றை வைத்திருக்க வேண்டும். முதலுதவி பெட்டி வைத்திருக்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
News November 20, 2024
நெல்லை: மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குறிப்பாக இன்று(நவ.20) பள்ளிகளுக்கு நெல்லையில் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மழைக்கால அவசர உதவி எண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.