News March 17, 2025
தீ விபத்தில் உயிரிழந்த மூதாட்டி-போலீசார் வழக்குப்பதிவு

திருச்சி, வாளசிராமணி பகுதியைச் சேர்ந்த பெரியம்மாள் (76) முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் இருந்த குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், பெரியம்மாள் மீதும் தீப்பிடித்து அதிகமாக காயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News April 20, 2025
குறுக்கே வந்த தள்ளுவண்டி – மெக்கானிக் பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து அழககவுண்டம்பட்டியைச் சேர்ந்த நந்தகுமார் டூவீலர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது வடக்கு இடையபட்டி என்ற இடத்தில் தண்ணீர் பிடித்து சென்ற தள்ளு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து புத்தாநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News April 19, 2025
திருச்சி: கோடை கால சுற்றுலா செல்ல சூப்பர் இடம்!

திருச்சியில் அடிக்கிற வெயிலுக்கு இதமா எங்கயாச்சும் போய்ட்டு வந்தா நல்லா இருக்கும் என்று தோன்றுகிறதா? கவலையை விடுங்க. திருச்சிக்கு வடக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பச்சமலை, ஒரு பசுமையான மலைத்தொடராகும். நீர்வீழ்ச்சிகள், பசுமையான தோட்டங்கள் என பச்சை மலைக்கு ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. திருச்சியில் இருந்து ஒரே நாளில் கிளம்பி சுற்றிப்பார்த்துவிட்டு வீடு திரும்ப இது சூப்பர் இடமாகும். SHARE!
News April 19, 2025
முதுநிலை நீட்தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்

மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் முதுநிலை நீட் தேர்வு இந்த ஆண்டு ஜூன்.15-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு திருச்சி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தற்போது தொடங்கியுள்ளது. https://natboard.edu.in என்ற இணையதளத்தில் மே.7-ம் வரை விண்ணப்பிக்கலாம் மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.