News April 27, 2024

திருவிடந்தை பெருமாள் கோவில் சிறப்பு

image

108 வைணவ திவ்ய தேசங்களில் 63ஆவது திவ்ய தேசமான நித்தியக் கல்யாண பெருமாள் கோயில் செங்கல்பட்டு, திருவிடந்தையில் அமைந்துள்ளது. 7ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டு 11ஆம் நூற்றாண்டில் சோழர்களால் பராமரிக்கப்பட்டது. இக்கோவிலில் சிற்பத்தூண் மண்டபம், மற்றும் கிபி. 959 ஆம் ஆண்டுகால கல்வெட்டுக்களும் உள்ளன. தென்கலை வழிபாட்டு முறை இங்கு பின்பற்றப்படுகிறது.

Similar News

News November 20, 2024

ரயில் சேவையில் மாற்றம்: நோட் பண்ணிக்கோங்க

image

சென்னை எழும்பூர் – விழுப்புரம் மாவட்டத்தின் சிங்கப்பெருமாள் கோயில் – செங்கல்பட்டு ரயில்வே நிலையங்கள் இடையிலான பகுதிகளில் இன்று (நவ.20) முதல் நவ.23ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பிற்பகல் 1.10 மணி முதல் பிற்பகல் 4.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News November 20, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்ட அளவில் நடைபெற உள்ளது. வரும் 21ஆம் தேதி மதுராந்தகத்திலும், 22ஆம் தேதி செங்கல்பட்டிலும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News November 20, 2024

செங்கல்பட்டில் நாளை மின்தடை அறிவிப்பு

image

செங்கல்பட்டு மற்றும் நல்லம்பாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை (நவ.21) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் 4 மணி வரை கண்டிகை, ரத்தினமங்கலம், வெங்கம்பாக்கம், டாலர்ஸ் காலனி, கீரப்பாக்கம், போரூர், பனங்காட்டுப்பாக்கம், போலீஸ் ஹவுசிங் போர்டு, நல்லம்பாக்கம், குமிழி, அமணம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க