News March 30, 2025
திருவாரூர் மாவட்ட தொடக்கப்பள்ளி தேர்வில் மாற்றம்

திருவாரூர் மாவட்ட தொடக்க பள்ளிகளில் 1முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 09 முதல் 21 வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் மாணவர்களின் நலன்கருதி தேர்வுகள் முன்கூட்டியே நடத்த திட்டமிட்டு வருகின்ற ஏப்ரல் 07 முதல் 17 வரை நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
Similar News
News April 3, 2025
திருவாரூரில் தேர் பணி தீவிரம்

திருவாரூரில் வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி ஆழி தேரோட்டம் நடைபெறுவதால் தேரை அலங்கரிக்கும் பணி மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பக்தர்கள் அனைவரும் திருவாரூர் ஆழி தேரை காண்பதற்கு மிக ஆவலுடன் உள்ளனர். தேரை சுற்றி வருவதற்கு நான்கு வீதிகளும் இடையூறு இல்லாமல் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் தேர் திருவிழா மிக விமர்சியாக கொண்டாடப்பட இருக்கிறது.
News April 2, 2025
திருத்துறைப்பூண்டியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள சாய்ராம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வரும் ஏப்.5-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 4:30 மணியளவில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ”அடுத்த இலக்கு” எனும் தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாணவர்களுக்கு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
News April 2, 2025
திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று திடீரென கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் திருவாரூர், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!