News April 14, 2024

திருவள்ளூர்: ரயில் மோதி சிறுமி பலி

image

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 9ம் வகுப்பு மாணவி ரயில் மோதி உயிரிழந்தார். திருப்பத்தூரைச் சேர்ந்த அன்பழகனின் மகள் மகாலட்சுமி. விடுமுறைக்கு புட்லூரில் உள்ள தனது சித்தப்பாவின் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்றிரவு பழனி செல்வதற்காக ரயில் ஏற வந்த போது, தண்டவாளத்தைக் கடக்கையில் ரயில் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 5, 2025

BREAKING: திருவள்ளூர் MBBS மாணவி தற்கொலை!

image

திருவள்ளூரைச் சேர்ந்த திவ்யா கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். டி.பி.சத்திரம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 5) தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தந்தை பணிச்சுமை காரணமாகதான் தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News August 5, 2025

திருவள்ளூரில் ரயில்வே வேலை!

image

திருவள்ளூர் மக்களே, இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு மேல்தான் இந்த <>இணையத்தளத்தில் <<>>விண்ணப்பிக்க முடியும். சேவ் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க!

News August 5, 2025

திருவள்ளூரில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஆர்.கே.பேட்டை, பூந்தமல்லி, கடம்பத்தூர், சோழவரம், திருத்தணி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இங்கு <>கிளிக்<<>> செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து, உடனடியாக பயன்பெறலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!