News March 21, 2025

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் 41973 விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இவர்களில் 16250 பேர் மட்டுமே தனித்துவ அடையாள அட்டை பெற்றுள்ளனர். மீதமுள்ள 25,723 விவசாயிகள் மார்ச் 31க்குள் தனித்துவ அடையாள அட்டை பெற்றால் மட்டுமே ஏப்ரல் மாதம் கவுரவ உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Similar News

News March 24, 2025

வேண்டிய வரம் அருளும் பவானி அம்மன் திருக்கோவில்

image

திருவள்ளூர், பெரியபாளையத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க

News March 24, 2025

சென்னை TIDEL Parkல் வேலை- ரூ.1,87,000 வரை சம்பளம்

image

சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 24, 2025

கப்பல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், ஸ்கபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து பதிவு செய்யவும்.

error: Content is protected !!