News March 17, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News March 19, 2025

கொரியர் ஊழியர் மயங்கி விழுந்து பலி

image

திருத்தணி பகுதியை சேர்ந்தவர் சரவணன், டெலிவரி வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மதியம் மத்துார் பகுதியில் கொரியர் கொடுக்க பேருந்தில் சென்றார். மத்துார் ரயில்வே கேட் அருகே இறங்கி நடந்து சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு,மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். 

News March 18, 2025

திருவள்ளூரில் வெளிநாட்டு பல்கலை கிளை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரில் லண்டன் டைம்ஸ் உயர் கல்வி நிறுவனத்தின் சார்பில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளை அமைப்பது தொடர்பாக இன்று தொழிற்துறையுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அறிவுசார் நகரத்தை அமைப்பதற்காக கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்கத்தாக்குளம், எர்ணாங்குப்பம், வெங்கல் ஆகிய கிராமங்களில் 870 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தப்பட உள்ளன.

News March 18, 2025

நாய் கடி சிகிச்சைக்கு, நிதி உதவி கேட்கும் பெற்றோர்

image

ஆர்.கே.பேட்டை அருகே ஶ்ரீ கிருஷ்ணாபுரம் (முரகுப்பம்) கிராமத்தில் நேற்று இரவு, இந்த கிராமத்தில் வசிக்கும் பழனி என்பவரின் குழந்தை வெற்றிவேலை வெறி நாய் கடித்ததில் படுகாயம் அடைந்தார். தற்போது சி.எம்.சி மருத்துவமணையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.சி.எம்.சியில் சிகிச்சைக்கு ரூ.4 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது. கூலி வேலை செய்யும் குழந்தை பெற்றோர் நிதி உதவி கேட்டுள்ளனர்.

error: Content is protected !!