News April 5, 2025
திருவள்ளூரில் பறந்த அதிரடி உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தின் கடைகள், வணிக மற்றும் தொழில் நிறுவனங்களில், மே 1ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார். முதன்மையாக தமிழ், இரண்டாவது ஆங்கிலம், தேவையானால் மூன்றாவது மொழியில் எழுதலாம். மறுப்பவர்களுக்கு 1947-ன் சட்ட விதியின் கீழ் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். *கடை வைத்திருக்கும் நண்பர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் பகிரவும்*
Similar News
News April 11, 2025
நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி

எண்ணூர் மற்றும் படப்பை அருகே 2 வேதனையூட்டும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கடல் மற்றும் ஏரியில் நீரில் மூழ்கி 11 வயது சிறுவர்கள் சாய்மோனிஷ் மற்றும் சோஜான் ஆகியோர் நேற்று (ஏப்ரல் 10) உயிரிழந்தனர். சாய்மோனிஷ், தாழங்குப்பம் கடற்கரையில் அலையில் சிக்கி உயிரிழந்தார். சோஜான், ஆதனூர் ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது மூழ்கி உயிரிழந்தார். இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 11, 2025
236 சத்துணவு உதவியாளர் பணிக்கு அழைப்பு

திருவள்ளூரில் அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளின் சத்துணவு மையங்களில், காலியாக உள்ள 236 சமையல் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 21- 40 வயதுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். குடியிருப்பும் பணியிடமும் 3 கி.மீ. தூரத்தில் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் www.tiruvallur.nic.in-இல் பதிவிறக்கம் செய்து, ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News April 11, 2025
இ-சேவை மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பா?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ‘இ-சேவை’ மையங்களில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பதாக புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ரூ.200 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் வருகின்றன. இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து 044-27662455 என்ற எண் மூலம் புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.