News April 13, 2025

திருவள்ளூரில் இன்று இயற்கை வேளாண் சந்தை

image

திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பின் பேரில், இன்று திருவள்ளூர் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் சந்தை துவங்கவுள்ளது. காய்கறி, பழம், மரச்செக்கு எண்ணெய், பாரம்பரிய அரிசி, தேன், பனை வெல்லம் உள்ளிட்டவை குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இச்சந்தை, ஒவ்வொரு மாதத்தின் 2வது ஞாயிறு காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News April 17, 2025

போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

image

திருவள்ளூா் டோல்கேட் பகுதியில் உள்ள ஊத்துக்கோட்டை சாலையில், போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த பைக்கை சோதனை செய்ய போலீசார் மறித்தனா். பைக்கை விட்டு இறங்கி வந்த இளைஞா், போலீசாரை தகாத வாா்த்தை பேசியதோடு, பட்டா கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர், போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது.

News April 17, 2025

கொலை செய்ய சதி: மேலும் ஒருவர் கைது

image

திருமழிசை பகுதியில் எபினேசர் என்பவர் கடந்த 2024 செப்டம்பர் மாதம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மண்ணுார் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப் பழியாக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 7 பேரில் மூவரை கடந்த 15ஆம் தேதி இரவு வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 4 பேரை தேடி வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 16) கவியரசு (26) என்பவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

News April 17, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று 16/04/2025 இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!