News March 22, 2025
திருவள்ளூரில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூரில் இன்று (மார்.22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அம்பத்தூர், ஆவடி, திருமழிசை போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் குடை அல்லது ரெயின்கோர்டை எடுத்துச் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?
Similar News
News March 25, 2025
ஆவடி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

ஆவடியில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 24, 2025
வேண்டிய வரம் அருளும் பவானி அம்மன் திருக்கோவில்

திருவள்ளூர், பெரியபாளையத்தில், ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் திருக்கோவில். இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
News March 24, 2025
சென்னை TIDEL Parkல் வேலை- ரூ.1,87,000 வரை சம்பளம்

சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <