News March 27, 2025
திருவள்ளூரில் அரசு சார்பில் நீச்சல் பயிற்சி

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம். நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் 12 நாட்கள் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 1, 2025
குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பானை வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கவனத்திற்கு குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. என அறிவித்திருக்கின்றனர்.
News April 1, 2025
திருவள்ளூர்: தடை நீக்கும் வரமூர்த்திஸ்வரர் கோயில்

திருவள்ளூர், சோழவரம் அருகே உள்ள எருமைவெட்டிபாளையம் கிராமத்தில் வரமூர்த்திஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சியளிக்கிறார். ஆதலால் இங்குள்ள இறைவனை வணங்கினால் திருமணம் உள்ளிட்ட அனைத்து தடைகளும் நீங்கும். இங்கே வரும் பக்தர்கள் ஊற்றெடுக்கும் கங்கை நீரை அருந்தி, கிருஷண அரச மரத்தை சுற்றி வந்த பின் சிவனை வணங்கினால், பித்ரு தோஷம் நீங்கும். ஷேர் பண்ணுங்க
News April 1, 2025
சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.