News March 29, 2025

திருவள்ளூரில்  402 பேர் ஆப்சென்ட் 

image

தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் 144 மையங்களில் 32,029 மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர். 402 பேர் தேர்வுக்கு வரவில்லை. அனைத்து மையங்களிலும் மூல வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 10ஆம் வகுப்பு தேர்வு 15-ம் தேதி வரை நடைபெறும்.

Similar News

News April 2, 2025

திருவள்ளூரில் நீட் எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

image

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 4  மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இதன்படி, திருவள்ளூர், கடம்பத்தூர் -காக்கனூர் நடுநிலைப்பள்ளி, பூந்தமல்லி, வில்லிவாக்கம் -ஆவடி S.A பொறியியல் கல்லூரி, R.K பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு- அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் கோஜன் பொறியியல் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

News April 2, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் மாராத்தான் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் விழாவை முன்னிட்டு மாவட்ட விளையாட்டரங்கில் வரும் ஏப்.6 அன்று காலை 6 மணிக்கு மாராத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில், 16-36 வயதுடையோர் கலந்துகொள்ளலாம். போட்டியில், முதலில் வரும் ஐந்து ஆண்கள் & பெண்களுக்கு தலா ரூ.10000 வழங்கப்படும். <>முன்பதிவு<<>> செய்திட 7401703482, 8072908634 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். *நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்வும்*

News April 2, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் வீணாக்கப்பட்ட ரூ.42 கோடி

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 526 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குளம் அமைக்க ரூ.42,60,60000 ஒதுக்கப்பட்டது. தற்போது, மாவட்டம் முழுவதும் பணி முடிந்த நிலையில், 95% ஊராட்சிகளில் பணி அறைகுறையாகவே நடந்துள்ளது. குளம் வெட்ட சொன்னால் குழந்தைகள் விளையாட பள்ளம் வெட்டியது போல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ரூ.42 கோடி வீணாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!