News December 4, 2024
திருவண்ணாமலை அருகே 50 பேர் மீது வழக்கு பதிவு

செய்யார் நகரில் மழை நீர் சூழ்ந்துள்ளதை அகற்றாத திருவத்திபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று செய்யார் நகரில் சாலை மறியலில் ஈடுபட்ட 20 ஆண்கள் 30 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் மீது போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும், இடையூறாக சாலை மறியலில் ஈடுபட்டதாக கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில், செய்யாறு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News August 11, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு :

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக. 11) நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News August 10, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு :

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக. 10) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News August 10, 2025
திருவண்ணாமலை மக்களே கனமழை எச்சரிக்கை – உஷார்!!

திருவண்ணாமலை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று (ஆக.10) இரவு வரை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை வர வாய்ப்புள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படலாம். உணவு, மெழுகுவர்த்தி, விளக்கு போன்ற அத்தியாவசிய பொருட்களை எளிதாய் எடுக்கும் வண்ணம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க சொல்லுங்க.