News March 27, 2024

திருவண்ணாமலை: அதிமுக பிரமுகர் பலி

image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிபாளையம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை. இவர் அதிமுக பிரமுகரான இவர் நேற்று மாலை கட்சிக்காரர்களுடன் தேர்தல் தொடர்பாக பேசிவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது மாங்காயை மரம் பஸ் ஸ்டாப் அருகே தடுப்பு சுவரில் ஸ்கூட்டர் மோதியதில் படுகாயம் அடைந்தார்.பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இரவு இறந்துவிட்டார்.

Similar News

News April 17, 2025

குடிநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

image

தி.மலை மாவட்டம் தூசி அருகே உள்ள உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த துருவேஸ்வரன் என்ற 3 வயது சிறுவன் நேற்று தனது தந்தை மொபட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, மொபெட் கீழே விழுந்ததில், சிறுவன் துருவேஸ்வரன் அருகில் இருந்த குடிநீர் தொட்டியில் விழுது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிந்தான். இதுகுறித்து தூசி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை ஜாக்கிரதையா பாத்துக்கோங்க பெற்றோர்களே.

News April 16, 2025

சோமாசிபாடி முருகனை தரிசித்தால் கிடைக்கும் நன்மைகள்

image

தி.மலை, சோமாசிபாடி மலையில் ‘பவர்புல்’ முருகன் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் குளத்தில் கிருத்திகையில் மட்டுமே பூக்கும் செங்கழுநீர்ப் பூ, முருகனுக்கு சாத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே மறைந்து போவது, கலியுகத்தின் அதியம். இங்கு, செவ்வாய்கிழமைகளில் 6 தீபங்கள் ஏற்றினால் கல்வியில் சிறந்து விளங்கலாம், நல்ல வேலை, பதவி உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. *நண்பர்களுக்கு பகிரவும்*

News April 16, 2025

திருவண்ணாமலை: ஓதுவார் பயிற்சி பெற நல்ல வாய்ப்பு

image

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சிப்பள்ளி நடைபெறுகிறது. இதற்கு, 13-24 வயதிற்குட்பட்ட 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்துக்கள் விண்ணப்பிக்கலாம். இலவச உணவு, உறைவிடம், மாதம் ரூ.4,000 வழங்கப்படும். விருப்பமுள்ளோர் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பத்தை பதிவிறக்கி வரும் ஏப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம். *கடவுள் பணி செய்ய அற்புத வாய்ப்பு. தெரிந்தவர்களுக்கும் பகிருங்கள்*

error: Content is protected !!