News March 21, 2024

திருப்பூர்: சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

image

திருப்பூர் மடத்துக்குளம் அருகே சோழமாதேவியை சேர்ந்த திருமூர்த்தி, அழகன் ஆகிய இருவரும் நேற்று (மார்ச்.20) இரவு உடுமலை மடத்துக்குளம் நான்கு வழிச்சாலையில், பழனி செல்லும் ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, எதிரே வந்த சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 14, 2025

திருப்பூர்: சித்திரையில் கண்டிபாக செல்ல வேண்டிய கோயில்கள்!

image

கொண்டத்துக்காளியம்மன் கோயில் – பெருமாநல்லூர். வலுப்பூர் அம்மன் கோயில் – அழகுமலை. மாரியம்மன் கோயில் – கருவலூர். பொங்காளியம்மன் கோவில் – நல்லூர். பல்லடத்தம்மன் கோயில் – பூமலூர். வஞ்சியம்மன் கோயில் – மூலனூர். மாரியம்மன் கோயில் தாராபுரம். தில்லாபுரியம்மன் கோயில் – தாராபுரம். சித்திரை மாதம் அம்மன் கோயில்களுக்கு செல்வதால் வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் அண்டாதாம். இதை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

சிவன்மலை முருகன் கோயில்!

image

திருப்பூரில் புகழ்பெற்ற சிவன்மலை முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

திருப்பூர்: ஆசிரியர் வேலை வாய்ப்பு முகாம்

image

திருப்பூர் பல்லடத்தில், மாநில அளவிலான, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான, மாபெரும் ஆசிரியர் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கம் நடத்தும் இந்த முகாம், கண்ணம்மாள் நேஷனல் பள்ளியில், வரும் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் கலந்து கொண்டு, ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!