News February 27, 2025
திருப்பூர்: அஞ்சல் விபத்து காப்பீடு முகாம்

திருப்பூரில், அஞ்சல் துறை சார்பில் விபத்து காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் இறப்பு, நிரந்தர மொத்த ஊனம், நிரந்தர பகுதி ஊனம், இறுதிச் சடங்கு செலவுகள், ஒரு நபர் போக்குவரத்து செலவு, இரண்டு குழந்தைகள் கல்விச் செலவு, உள்நோயாளி உள்ளிட்டவைகளுக்கு காப்பீடு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Similar News
News April 30, 2025
திருப்பூர்: சட்டக்கல்லூரி மாணவர் உயிரிழப்பு

ஊத்துக்குளி தாலுகாவுக்கு உட்பட்ட பாப்பம்பாளையம், முல்லை நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திர பிரசாத். இவர் பெருமாநல்லூரில் செயல்படும் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சட்டக் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
News April 29, 2025
திருப்பூர்: மதுக்கடைகளை மூட உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் உள்ள மதுபான கடைகள், அதையொட்டி பார்கள் (ம) நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும், உழைப்பாளர் தினமான மே.1ஆம் தேதி மூடப்பட வேண்டும். மேலும், சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
திருப்பூர்: முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்!

திருப்பூர் வடக்கு – 0421-2239380.
திருப்பூர் தெற்கு – 0421-2251189.
வேலாம்பாளையம் – 0421-2255200.
திருமுருகன்பூண்டி – 04296-276100.
அவிநாசி – 9498101328.
பெருமாநல்லூர் – 9498101344.
பல்லடம் – 9498101343.
உடுமலை – 9498101345.
மடத்துக்குளம் – 04252-252329.
தாராபுரம் – 04258-220208.
காங்கேயம் – 04257-230641.
வெள்ளகோவில் – 04257-260522. இதை SHARE பண்ணுங்க.