News March 21, 2025
திருப்பூருக்கு ரூ.890 கோடி!

திருப்பூர் மாவட்டத்திற்கு ரூ.890 கோடி மதிப்பீட்டில் ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் மேற்கொள்ளப்படும். முத்தூர்-காங்கேயம் குடிநீர்த் திட்டத்தில் குழாய்கள், மோட்டார்கள் உள்ளிட்டவை மறுசீரமைப்பு செய்யப்படும். மேலும், ரூ.2423 கோடியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் 3 ஆண்டில் நிறைவேற்றப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
Similar News
News March 31, 2025
சென்னிமலை முருகன் பற்றி தெரியுமா?

நாகத்திற்கும், வாயுதேவனுக்கும் ஏற்பட்ட சண்டையில், மேரு மலை உடைந்து. இதில் சிகரப் பகுதி, பூந்துறை என்ற இடத்தில் விழுந்தது. அந்த இடமே சென்னிமலை. இதற்கு, சிரிகிரி, புஷ்பகிரி, மகுடகிரி என்ற பெயர்களும் உண்டு. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இந்த கோயில், 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாம். தீமைகளை விரட்டும், சர்வ வல்லமை கொண்ட கடவுளாக, இங்கு முருகன் வீற்றிருக்கிறார். இத்தலம் செவ்வாய் பரிகார சிறப்பு தலமாகும்.
News March 31, 2025
கேன் வாட்டர் குடிப்பவர்கள் கவனத்திற்கு

கோடை காலம் முன்னரே திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். (Share பண்ணுங்க)
News March 31, 2025
திருப்பூர்: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

திருப்பூர் மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)