News March 30, 2024

திருப்பூரில் மூன்று லட்சத்தில் 100 ரூபாய் பறிமுதல்

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு சட்டப்பேரவை தொகுதி வாலிபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த பிரபு என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த மூன்று லட்சத்து 100 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2025

திருப்பூர்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

திருப்பூர், தாராபுரத்தை அடுத்த அலங்கியம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (25). இவர் தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, அலங்கியம் அருகே உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீதர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News April 19, 2025

குண்டடத்தில் மாயமான பெண் பிணமாக மீட்பு

image

குண்டடம் அருகே உள்ள சின்னமோளரப்பட்டியை சேர்ந்த சீரங்க சாமி என்பவரின் மனைவி
 விசாலாட்சி (62).மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் திடீரென மாயமானார். குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர் அப்போது உப்பாறு அணையில் விசாலாட்சியை பிணமாக மீட்டனர்

News April 19, 2025

வேண்டுதலை நிறைவேற்றும் அற்புத கோயில்

image

திருப்பூர் மாவட்டம் எஸ்.பெரியபாளையம் அருகே பிரசித்தி பெற்ற சுக்ரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுக்ரீஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் நினைத்தது நடக்கும், மருகு போன்ற தோல் சம்மந்தமான பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!