News September 14, 2024
திருப்பத்தூர் மாவட்டத்தில் விளையாட்டு தேதி மாற்றம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 17 ஆம் தேதி நடைபெற இருந்த முதல்வர் கேப்பை விளையாட்டுப் போட்டிகள் 19-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம்பூர், ஜோலார்பேட்டை திருப்பத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் 17ஆம் தேதி நடக்க இருந்த விளையாட்டு போட்டிகள் வரும் 19 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 7, 2025
இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்கள்

இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், புகார் இருந்தாலும் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை உடனே அழைக்கலாம்.
News August 6, 2025
திருப்பத்தூரில் வள்ளுவர் சிலை திறப்பு

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் செல்வம் மாலை அணிவித்து திறந்து வைத்தார். உடன் செஞ்சிலுவை சங்க திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கிஷோர் பிரசாத் மற்றும் பலர் உள்ளனர்.
News August 6, 2025
திருப்பத்தூர்: தாசில்தார் மீது எப்படி புகார் அளிக்கலாம்?

திருப்பத்தூர் மக்களே சாதி, குடிமை, குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா, உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம்.அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04179-299100) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.