News May 24, 2024

திருப்பத்தூர்: கட்டடம் இடிந்து 6 பேர் படுகாயம்!

image

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காவலர் குடியிருப்பு அருகே நேற்று(மே 23) மழைக்கு ஒதுங்கிய 15 பேர் மீது கட்டடம் இடிந்து விழுந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் கூலி தொழிலாளிகள் மற்றும் பெண் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Similar News

News April 30, 2025

57 பேர் குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைப்பு

image

சிவகங்கை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதாக ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நான்கு மாதங்களில் சுமார் 57 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

News April 29, 2025

கொம்பன் காளையை கண்டுபிடித்தால் ரூ.30 ஆயிரம்

image

கண்டரமாணிக்கத்தில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிட்ட கொம்பன் காளை கே.வலையப்பட்டியில் பிடி கயிறுடன் சென்ற நிலையில் காளையை காணவில்லை, கொம்பன் என்று கூப்பிட்டால் ஓடிவரும் காளையை கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என காளையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 9326506153, 7094924233, 8939258484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News April 29, 2025

கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

தொழிலாளர் தினம் (01.05.2025) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்தினை, ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். எனவே, கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட  ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!