News March 23, 2024
திருப்பத்தூர் அருகே விபத்து: ஒருவர் பலி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையில் நேற்று இரவு சென்னை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியை சேர்ந்த நிஷாந்த் (22) என்பவர் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 14, 2025
திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
News April 14, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 13) இரவு ரோந்து போலீஸ் பட்டியல் விவரங்கள் வெளியாகிவுள்ளது. ஆம்பூர் டவுன், ஆம்பூர் தாலுகா, வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா, திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலுகா, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, அலங்காயம், உமராபாத், உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் இன்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்ணை அழைக்கலாம்.
News April 13, 2025
தமிழ் புத்தாண்டு- முருகன் கோயிலுக்கு போங்க

தமிழ் கடவுள் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். எனவே திருப்பத்தூரில், ஜலகம்பாறை முருகன் கோயில், பசிலிகுட்டை முருகன் கோயில், மயில் பறை கோயில் உள்ளிட்ட அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்லலாம். வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டும். மற்ற நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.