News April 27, 2025

திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் முன் எச்சரிக்கை நடவடிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயை தடுக்கும் வகையில் மே 28 முதல் 1லட்சத்து 29ஆயிரம் ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் க.சிவசுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இந்த நோய் சிறுநீர், சாணம் போன்றவற்றின் மூலம் வேகமாக பரவுவதால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் போடப்பட்ட ஆடுகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் விவரம் சேமிக்கப்படுகின்றன.

Similar News

News April 28, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 01.05.2025 அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 208 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி  உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். 

News April 28, 2025

திருப்பத்தூரில் எந்த பதவியில் யார்?

image

▶ திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்- சிவசௌந்திரவல்லி (04179222111)
▶ திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி- ஷ்ரேயா குப்தா (04179-221105)
▶ திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர்- நாராயணன் ( 04179290391)
▶ திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)- உமாமகேஸ்வரி ( 7305089501)
முக்கிய அதிகாரிகளின் எண்களை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்.

News April 28, 2025

கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கியுள்ளது. இந்நிலையில் குழந்தைகள் இந்த விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க அருமையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறக்க கோடைகால இலவச பயிற்சி முகாம் அரசு சார்பில் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் வரும் மே.15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு: 7401703463. பெற்றோர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!