News March 22, 2024
திருநங்கைகள் 100% வாக்களிக்க வேண்டும்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா திருநங்கைகள் தபால் அட்டை மூலம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.
Similar News
News April 4, 2025
கம்பம் : பாம்பு தீண்டியதில் இளைஞர் உயிரிழப்பு

கம்பம் அருகே சுருளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (21). இவர் நேற்று முன் தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது பைக்கில் மறைந்திருந்த பாம்பு இவரை தீண்டி உள்ளது. கம்பம் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஹரிகிருஷ்ணன் உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு (ஏப்.3) பதிவு.
News April 4, 2025
தேனி: கடைகளில் தமிழில் பெயர் பலகை கட்டாயம்

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை வைக்க குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்தில் செயல்படும் நிறுவனங்கள் தங்கள் பெயர் பலகைகளை மே.15.க்குள் தமிழில் வைத்திட வேண்டும். அதன் பிறகும் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
News April 4, 2025
தேனி : தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் மில் நிறுவனத்தில் 60க்கும் மேற்பட்ட இயந்திர ஆப்ரேட்டர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<