News April 2, 2025
திருத்துறைப்பூண்டியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள சாய்ராம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வரும் ஏப்.5-ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 4:30 மணியளவில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ”அடுத்த இலக்கு” எனும் தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாணவர்களுக்கு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
Similar News
News April 7, 2025
திருவாரூர்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை நிர்வாகி (Sales Executive) பணியிடத்திற்கான அறிவிப்பு தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. அனுபவத்திற்கேற்ப ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை இதற்கு மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. டிகிரி முடித்தவர்கள் <
News April 7, 2025
திருவாரூர் மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.7) காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவெடுத்தது. இதன் காரணமாக நாளை (ஏப்.8) திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News April 7, 2025
திருவாரூருக்கு இன்று உள்ளூர் விடுமுறை

திருவாரூரில் புகழ்பெற்ற தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று (ஏப்.07) நடைபெற உள்ளது. இதனால் திருவாரூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிய உள்ளனர். இதனை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)