News September 5, 2024
திருச்சியில் டெமு ரயில்கள் மாற்றம்

தெற்கு ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்டு வரும் டெமு ரயில்கள் அனைத்தும், மெமு ரயில்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதுவரை 9 ரயில்கள் மெமு ரயில்களாக மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன. மேலும் மெமு ரயில்களுக்கான பராமரிப்பு முனையம் கட்ட கடந்த நிதியாண்டில் ரூ.50 கோடியில் புதிய முனையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திருச்சி மஞ்சத்திடல் பகுதியில் 73 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 26, 2025
குழந்தை திருமணம் : திருச்சி காவல்துறை எச்சரிக்கை

குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு திருச்சி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், கைவிடப்பட்ட குழந்தைகள், குழந்தை கடத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் எந்தவொரு குற்றம் பற்றியும் புகார் தெரிவிக்க குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அழைக்க கூறியுள்ளது. மேலும் குழந்தை திருமணத்திற்கு எதிராக குரல் கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
News April 26, 2025
பஞ்சப்பூர் பேருந்து நிலையம் பராமரிப்பு பணிக்கு டெண்டர்

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் வரும் 9ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதையொட்டி பேருந்து நிலையத்தை 15 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. டெண்டர் கோர விரும்புவர்கள் https://tntenders.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 25, 2025
போப் ஆண்டவர் உடலுக்கு திருச்சி எம்.எல்.ஏ அஞ்சலி

உலக கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 22-ம் தேதி காலமானார். தொடர்ந்து வாடிகனில் நடைபெற்ற இவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் தமிழக அரசின் சார்பில் இன்று கலந்து கொண்டு, மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.