News March 26, 2024
திருச்சியில் எம்.எல்.ஏ அறிக்கை!

திருச்சி எம்எல்ஏ இனிகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், பாஜகவுக்கு தமிழக மக்கள் வாக்களித்தால் அது பெரும் அவமானம் எனச் முதல்வர் ஸ்டாலின் விளாசி உள்ளதாக கூறினார் . ஒருவேளை மீண்டும் மோடியே ஆட்சிக்கு வந்து விட்டால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும் என முதல்வர் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.
Similar News
News April 18, 2025
திருச்சி: ரயில்வே வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.இ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.
News April 18, 2025
திருச்சி: இந்த எண்களை மிஸ் பண்ணாதீங்க

திருச்சி மாவட்ட பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள்:
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0431-2415031, 2415032, 2415033
▶️குழந்தைகள் உதவி மையம் – 1098
▶️பெண்கள் பாதுகாப்பு உதவி – 181
▶️விபத்து அவசர வாகன உதவி – 102, 108
▶️பேரிடர் கால உதவி – 1077
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.
News April 18, 2025
திருச்சி: கார் மோதி விவசாயி பலி

வையம்பட்டியை அடுத்த சேசலூர் முத்தமடைப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சடையன் (50). இவர் நேற்று காலை தனது தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டு, சேசலூர் அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சடையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.