News April 14, 2025
திருச்சி மாவட்டத்தில் 68.3 மி.மீ மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் திடீர் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் திருச்சி மாவட்டத்தின் முசிறி, புலிவலம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர் ஆகிய பகுதிகளில் மொத்தம் 68.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
திருச்சி: புலனாய்வு துறையில் வேலை; நாளை கடைசி நாள்

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 9, 2025
திருச்சியில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

திருச்சி மாவட்டத்தில் தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி காலை 10 மணி அளவில், திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இதில் ஐ.டி.ஐ முடித்துவிட்டு இதுவரை தொழிற்பயிற்சி பெறாதவர்கள் கலந்து கொள்ளலாம். இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு 0431-2553314 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
திருச்சி: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு !

திருச்சி மக்களே, முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் இலவசமாக ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <