News August 15, 2024
திருச்சி மாவட்டச் செயலாளர் அழைப்பு

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு, வடக்கு, மாநகரம் மாவட்ட கழக செயலாளர்கள் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் எதிர் கட்சி தலைவர் எடப்பாடியார் வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள மணப்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.சந்திரசேகர் இல்ல நிகழ்ச்சிக்கு வருகை தர இருக்கிறார். அவருக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Similar News
News April 30, 2025
அட்சய திருதியையில் இங்கு சென்று வழிபடுங்கள்

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியைக்கு தங்க நகைகள், மஞ்சள் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே திருச்சி மக்களே உங்கள் வீட்டின் அருகே உள்ள மகாலெட்சுமி, பெருமாள் மற்றும் குபேரர் கோயிலுக்கு சென்று வழிபட்டு தங்கம், மஞ்சள் மற்றும் கல்உப்பு போன்ற மங்கள பொருட்களை வாங்குங்கள். எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News April 30, 2025
அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து

திருச்சியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசு பஸ் எலக்ட்ரானிக் ரிங் ரோட்டில் திடீரென இரும்பு தடுப்பில் மோதியது. இதில் இரும்பு தடுப்பு சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது, தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் மோதியது. தொடர்ந்து சிலிண்டர் ஏற்றி வந்த சரக்கு வேனும் மோதி, சாலையில் கவிழ்ந்தது. இதில் வேன் டிரைவர் ரமேஷ் (37) பலத்த காயம் அடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
News April 30, 2025
திருச்சி மைய நூலகத்தில் கவிதை ஒப்புவித்தல் போட்டி

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 135வது பிறந்த நாளையொட்டி, மைய நூலகத்தில் மே 4ம் தேதி ஞாயிறு காலை 10 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு “பாரதிதாசனின் கவிதை ஒப்புவித்தல் போட்டி” நடக்கிறது. இதில் 6 – 12ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம். முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.500, ரூ.300, ரூ.200 பணப்பரிசு, பாரதிதாசன் கவிதை நூல் பரிசாக வழங்கப்படும்.