News March 22, 2024
திருச்சி: நடனமாடி மக்களை ஈர்த்த பெண்கள்

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை சிறுகனூரில் ஆதரித்து பேசுகிறார். இதை முன்னிட்டு பிரச்சார கூட்டத்திற்கு வருகை தரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை ஈர்க்கும் விதமாக ஸ்டாலின் மற்றும் உதயநிதி படத்துடன் மயில் தோகை போன்ற இறக்கையுடன் பெண்கள் நடனம் ஆடி பொதுமக்களை கவர்ந்தனர்.
Similar News
News April 10, 2025
திருச்சி மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள் …

திருச்சி மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு தொலைபேசி எண்கள். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0431-2415031, 2415032, மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, விபத்து அவசர வாகன உதவி – 102, பேரிடர் கால உதவி – 1077, விபத்து உதவி எண் – 108. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE செய்யவும்!
News April 10, 2025
திருச்சி வழியாக விடுமுறை கால ரயில் சேவை அறிவிப்பு

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை தாம்பரம் – போத்தனூர் வாராந்திர சிறப்பு ரயில் திருச்சி வழியாக ஏப்ரல்-11, 18, 25 மற்றும் மே-2 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை போத்தனூர் சென்றடையும். இந்தக் கோடை விடுமுறை சிறப்பு ரயிலை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென திருச்சி தெற்கு ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 10, 2025
பெண் எஸ்.எஸ்.ஐ இடம் மாற்ற வாக்கி டாக்கியில் உத்தரவு

அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக பணியாற்றிய சுமதி, கற்பழிப்பு தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசி, புகாரை ஏற்க மறுத்துள்ளார். இந்த விவகாரம் டி.ஐ.ஜி. வருண்குமார் கவனத்திற்கு சென்றதால், அவர் வாக்கி டாக்கி மூலம் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி, வாக்கி டாக்கியில் எஸ்.எஸ்.ஐ சுமதி-யை இடம் மாற்ற செய்ய உத்தரவிட்டார்.