News March 25, 2025
திருச்சி எம்பி காவல்துறைக்கு கோரிக்கை

மன்னார்புரம் அருகே நேற்று பாஜக சார்பில் நடந்த பொது கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிக்கொண்டிருந்தபோது தொண்டர்கள் கலைந்து சென்றதை தனியார் பத்திரிக்கையின் புகைப்பட கலைஞர் படம் பிடித்ததால் அவரையும், தொலைக்காட்சி ஒன்றின் நிருபரையும் அங்கிருந்த பாஜகவினர் தாக்கினர். இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்ட பாஜக.வினர் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எம்பி துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News April 7, 2025
ஸ்ரீரங்கம்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் முகாம் நாளைய தினம் (08.04.25) திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
News April 7, 2025
திருச்சியில் மத்திய அரசு தேர்வுகள் தேதி அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் என்.டி.ஏ, என்.ஏ மற்றும் சி.டி.எஸ் தேர்வுகள் திருச்சி மாவட்டத்தில் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த தேர்வை திருச்சி மாவட்டத்தில் 854 பேர் எழுத உள்ளனர். தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்து வர அனுமதி இல்லை. இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
News April 7, 2025
சீமானுக்கு கெடு விதித்த நீதிமன்றம்

திருச்சி, டிஐஜி வருண்குமார் வழக்கில் இன்று (ஏப்.07) சீமான் நேரில் ஆஜராக ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகாத நிலையில், இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராகவில்லை என்றால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று திருச்சி மாவட்ட நீதிமன்றம் கெடு விதித்து, உத்தரவிட்டுள்ளது.