News April 15, 2025
திருச்சி: அக்னிவீர் பிரிவுக்கு ஆள் சேர்ப்பு தேதி நீட்டிப்பு

திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னி வீரர்களின் பல்வேறு பிரிவுகளுக்கான ஆள்சேர்ப்புக்கான பதிவு ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 18, 2025
மணப்பாறை அருகே கபடி போட்டிக்கு அழைப்பு

மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி மாரியம்மன் கோவில் திடலில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கபடி போட்டி வரும் ஏப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.25,000 வழங்கப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள் 87548 59623, 90472 66007 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். உங்க பகுதி கபடி வீரர்களுக்கு இதை SHARE செய்யவும்.
News April 18, 2025
திருச்சி: ரயில்வே வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.இ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.
News April 18, 2025
திருச்சி: இந்த எண்களை மிஸ் பண்ணாதீங்க

திருச்சி மாவட்ட பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள்:
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0431-2415031, 2415032, 2415033
▶️குழந்தைகள் உதவி மையம் – 1098
▶️பெண்கள் பாதுகாப்பு உதவி – 181
▶️விபத்து அவசர வாகன உதவி – 102, 108
▶️பேரிடர் கால உதவி – 1077
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.