News May 31, 2024
திமுக வாக்கு எண்ணும் மைய முகவர்கள் கூட்டம்

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இன்று (மே.31) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலின்போது மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, அரூர் சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையை கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மொரப்பூரில் நாளை நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
Similar News
News April 20, 2025
மொரப்பூர் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

மொரப்பூர் அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர்(23). இவர் நேற்று தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்று உள்ளார், அப்போது ஆற்றில் மூழ்கி இறந்துள்ளார். இதுகுறித்து அரூர் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான மீட்பு குழுவினர் விரைந்து சென்று ஆற்றில் சடலமாக கிடந்த கிஷோரை மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 20, 2025
தர்மபுரியில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தர்மபுரி பிரிவு சார்பில் கோடை கால பயிற்சி முகாம் வருகின்ற 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் மே 15 ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. மேலும் இந்த பயிற்சி குறித்து விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் நேரில் சென்று விபரங்களை அறிந்து கொள்ளலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தெரிவித்தார்.
News April 20, 2025
தர்மபுரி மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க மக்களே! நல்லம்பள்ளி -9384094838, 04342-244456, காரிமங்கலம்-9384094839, 04348-242411, தர்மபுரி -9445000533, 04342-260927, பென்னாகரம்-9445000536, 04342-255636, அரூர் – 9445000534, 04346-222023, பாப்பிரெட்டிப்பட்டி -9445000535, 04346-246544, பாலக்கோடு – 9445000537, 04348-222045. *முக்கிய நம்பர்களான இவற்றை நண்பர்களுக்கும் பகிருங்கள்*